மனநலம் குன்றிய சிறுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை.
ஜூன் 05, 2020அலுத்கம பிரதேசத்தில் அண்மையில் மனநலம் குன்றிய சிறுவன் ஒருவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
களுத்துறை பொலிஸாரினால் மனநலம் குன்றிய சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை, தனியான விசாரணையொன்றை முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மே 25 ஆம் திகதி 16 வயதான தாரிக் அஹமட் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொலி ஒன்று சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகி பொதுமக்களின் சீற்றத்தையும் சமூக கண்டனத்தையும் ஈர்த்தது.
விசாரணைகள் நிறைவுபெற்ற பின்னர் குறித்த நபர்கள் குற்றவாளிகளாக காணப்படின் அவர்கள் மீது கடுமையான சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனரத்ன மேலும் தெரிவித்தார்.