11,709 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்தனர்.

ஜூன் 05, 2020

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மேலும் இருவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இவர்கள் இருவரும் வாத்துவ ப்ளு வோட்டர்ஸ் ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்குற்படுத்தப்பட்டவர்கள் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் படையினரால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் மையங்களில் 5240 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.