சொய்சாபுற துப்பாக்கி சூடு - பிரதான நம் பிரதான சந்தேக நபர் உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவிப்பு

ஜூன் 07, 2020

மொரட்டுவ சொய்சபுற பிரதேசத்தின் உணவகம் ஒன்றில் கடந்த மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று காலை பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொட, பல்லபன பகுதியில் உள்ள துனகஹவில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் முயன்ற போது சந்தேக நபர் பொலிஸாருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் (50) திவலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சந்தேகநபர், ஒரு முக்கிய பாதாள உலக நபராக அடையாளம் காணப்பட்டவர் எனவும், பல கொலைகள் மற்றும் குற்றச் செயல்களில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தார்.

பேலியகொட மற்றும் களனி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றது.