கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை

ஜூன் 09, 2020

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்பாகக் காணப்படும் என  எதிர்பார்ப்பதால் இவ்விடயம் தொடர்பாக கடற்படை மற்றும் மீனவ சமூகம் அவதானமாக இறக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, புத்தளத்திலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கடல் வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது.