சிறைகளில் இருந்து மொபைல் போன்கள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டன
ஜூன் 09, 2020- நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூச சிறைச்சாலைகளில் இருந்து 82 மொபைல் போன்கள், 55 சிம் அட்டைகள், பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
- சிறைச்சாலைகளில் நடந்த சோதனை நடவடிக்கைகளில் விஷேட அதிரடிப்படையினரும் பங்கேற்பு
நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூச சிறைச்சாலைகளில் இன்று (ஜூன், 09) காலை நடத்தப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது, 82 மொபைல் போன்கள், 55 சிம் அட்டைகள், பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 61 மொபைல் போன்கள், 51 சிம் அட்டைகள், 71 பேட்டரிகள், 30 சார்ஜர்கள், 16 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் கஞ்சா என்பன குறித்த சிறைச்சாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
"கொழும்பு சிறைச்சாலையிலிருந்து இரண்டு மொபைல் போன்களும், போகம்பர சிறைச்சாலையிலிருந்து நான்கு மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, மகசின் சிறைச்சாலையிலிருந்து பன்னிரண்டு தொலைபேசிகள், ஒரு பேட்டரி மற்றும் மூன்று மொபைல் போன்கள், நான்கு சிம் அட்டைகள், நான்கு பேட்டரிகள் என்பனவும் பூச சிறைச்சாலையிலிருந்து ஒரு தொலைபேசி சார்ஜர் என்பனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பூச சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து விஷேட அதிரடிப்படையினரும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கமிஷனர் ஜெனரல் உபுல்டேனியா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறைச்சாலையில் உள்ள சில குறிப்பிடத்தக்க பாதாள உலக குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்ட பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் எனசிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய தெரிவித்தார்.