வெளிநாட்டு அமைச்சினால் மாலைதீவிலுள்ள இலங்கையர்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு

ஜூன் 10, 2020

மாலைதீவில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களுக்காக சுமார் 10,000 கிலோ உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 2000 பொதிகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.   

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலின் காரணமாக மாலைதீவு அரசாங்கத்தால் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிக்கித்தவிக்கும் இலங்கையர்களுக்கு இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட ஒத்துழைப்புக்கள் அவர்களுக்கு உதவியாக அமையும் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.   

இதேவேளை, நாடு திரும்ப இருக்கும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை மேற்கொள்வதற்கு மாலைதீவு அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.