கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா தொற்றாளர்களாக இருவர் பதிவு

ஜூன் 10, 2020

இன்று (10) காலை 6 மணியுடன் நிறைவுற்ற கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இருவர் அடையாளம்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் மற்றைய நபர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர் என இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர், சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.    

இதேவேளை, இராணுவத்தினரால் முன்னெடுத்து செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தமது பீ சீ ஆர் பரிசோதனைகளை நிறைவுசெய்து தனிமைப்படுத்தலுக்கான  சான்றிதழ்கள்களைப் பெற்றுகொண்ட 61 பேர் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.    

இதன்பிரகாரம், இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த  சுமார் 12,452 பேர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ள அதேவேளை, தொடர்ந்தும் 5,118 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.