கொரோனா தொற்றுக்குள்ளான 637 கடற்படை வீரர்கள் குணமடைவு

ஜூன் 11, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களிர் இதுவரை சுமார் 637 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளனர்
 
நேற்றைய தினம் மேலும் எட்டு கடற்படை வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கையை 866 ஆக அதிகரித்தது.
 
அத்துடன் வைரஸினால் பாதிக்கப்பட்ட 229 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.