ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பெப்ரவரி 06, 2019

மாலி நாட்டில் ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் டென்னிஸ் ஜில்லிஸ்போரே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்று (பெப்ரவரி, 05) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மாலி நாட்டில் அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும்போது இடம்பெற்ற குண்டு தாக்குதலில் உயிரிழந்த இலங்கை அமைதிகாக்கும் படை வீரர்களின் உடல்களை கையளிக்கும் நோக்கில் லெப்டினென்ட் ஜெனரல் டென்னிஸ் ஜில்லிஸ்போரே அவர்கள் பெப்ரவரி, 04ஆம் திகதி இலங்கை நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.