'வெலி றொஹானின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

ஜூன் 11, 2020

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலீஸ் விசேட அதிரடிப்படையினரால் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இன்று (ஜூன், 11) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், போதைப்பொருள் கடத்தல் ஈடுபடும் 'வெலி றொஹான்' என்பவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும் வேளையில் 1.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவினை தன் வசம் வைத்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.