எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் நிலையத்தினால் ரிமோட் மூலம் இயங்கும் கிருமி தொற்று நீக்கும் ரோபோ அன்பளிப்பு

ஜூன் 11, 2020
  • குறைந்த நேரத்தில் பரந்தளவிலான பகுதி கிருமி தொற்று நீக்கம்

 மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த  எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் பொறியியலாளர்கள் குழுவினர் பொது இடங்களில் புற ஊதாகதிர்வீச்சை பயன்படுத்தி   கிருமி தொற்று நீக்கம் செய்யும் ரோபோ ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.  

குறித்த ரோபோவை பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களிடம்  நேற்று (ஜூன், 10) பாதுகாப்பு அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.  

ரிமோட் கருவி மூலம் இயக்கப்படும் இந்த அதிநவீன கண்டுபிடிப்பானது  புற ஊதாகதிர்வீச்சை பயன்படுத்தி கிருமி தொற்று நீக்கம் செய்யக்கூடியதாக உள்ளதுடன், குறித்த ரோபோ ஏற்கனவேயுள்ள கிருமி தொற்றுநீக்கம் செய்யும் திரவத்தின் அளவை தெரிவிக்கும் என எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இதன் மூலம் ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் போன்ற பாரியளவிலான இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் போன்ற பொது இடங்களுக்கும்  குறைந்த செலவில் கிருமி தொற்று நீக்கம் செய்யமுடியும்.

சர்வதேச சந்தையில் குறித்த ரோபோவை போன்ற ஒன்றை பெற்றுக்கொள்ள சுமார் ரூபா 30 மில்லியன்  செலவாகும் எனவும்,  தமது இந்த கண்டுபிடிப்பிற்கு ரூபா ஒரு  மில்லியன் மாத்திரமே செலவாகியதாகம் பொறியியல்துறை குழுவின் தலைவர் தரிந்து சுராஜ் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.