கிளிநொச்சி மாணவர்களுக்கு மேலும் கற்றல் உபகரண உதவி

பெப்ரவரி 06, 2019

'செனஹ சியபத' சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் வடபிராந்தியத்திலுள்ள சுமார் 3900க்கும் அதிகமான மாணவர்களுக்கு மேலும் ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சு, இடர் முகாமைத்துவ அமைச்சு மற்றும் டயலோக் அக்சியடா ஆகியன இணைந்து இதனை வழங்கியுள்ளனர். இன் நலன்புரி திட்டத்தின்கீழ் அண்மையில் கிளிநொச்சி பிராந்தியத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 3934 மாணவர்களுக்கு இக்கல்வி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இராணுவத்தினரால் கடந்த மாதம் (ஜனவரி) 30ஆம் திகதியிலிருந்து இம்மாதம் (பெப்ரவரி) முதலாம் திகதி வரை இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை நிருவாகிகள் ஆகியோரின் பரிந்துரையின்கீழ் இப்பிராந்தியத்திலுள்ள 15 பாடசாலைகளிலிருந்து பயனாளி மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.