இந்திய நீரளவியல் கப்பல் தாயகம் நோக்கி பயணம்

பெப்ரவரி 06, 2019

இந்திய கடற்படையின் நீரளவியல் அளவீட்டு கப்பலான "ஐஎன்எஸ் ஜமுனா", இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் இணைந்து இலங்கை கடற்பிராந்தியத்தில் மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் பின்னர் தாயகம் நோக்கி இன்றையதினம் (பெப்ரவரி, 06)பயணமானது. பிரியாவிடை பெற்றுச் செல்லும் "ஐஎன்எஸ் ஜமுனா" கடற்படை கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய சம்பிரதாய பூர்வமாக பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ஐஎன்எஸ் ஜமுனா" கடற்படை கப்பலானது கொழும்பு முதல் காலி வரையிலான கடற்பரப்பில் நீரளவியல் கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்காக கடந்த மாதம் (டிசம்பர், 20) இலங்கைக்கு வருகை தந்தது. 85.77 மீட்டர் நீளமும் 12.82மீட்டர் அகலத்தையும் கொண்ட இக்கப்பலில் 230 கடற்படை வீரர்கள் குழுமம் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. வெற்றிகரமாக நீரளவியல் கணக்கெடுப்பினை நிறைவு செய்த இக்கப்பல் இன்றையதினம் தாயகம் நோக்கி பயணமாகியது.