77 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்துள்ளனர்
ஜூன் 14, 2020இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்று வாரம் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 77 பேர் இன்று (ஜூன் 14) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இவர்களில் 72 பேர் வாஸ்கடுவ “சைடஸ் ஹோட்டல்“ மற்றும் ஐவர் கல்பிடிய “ருவலா ஹோட்டல்“ ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட் -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வீடு திரும்பிய அனைவரும் இறுதியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தளுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்பிரகாரம், இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த சுமார் 13,615 பேர் இன்றுவரை தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் 4,463 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குறித்த நிலையம் தெரிவிக்கின்றது.