வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர் பூங்கா இராணுவத்தினரால் புனர்நிர்மாணம்

பெப்ரவரி 07, 2019

அண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினரால் தொடர்ந்தது உதவிகள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக ஆணைகோட்டையிலுள்ள காக்கைதீவு முன் பள்ளி வளாக சிறுவர் பூங்கா முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீள மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது. புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குறித்த பூங்கா அண்மையில் (பெப்ரவரி,05) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 50 கற்றல் உபகரணங்கள் அடங்கிய அன்பளிப்பு பொதிகளை முன் பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் 50 உலருணவு பொதிகளை குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் குழுவினருக்கும் இந்நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், 51ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி, மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்தவருடம் டிசம்பர் மாதம் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக வடக்கின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கின. இதன்போது படையினரால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு மேலாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் படையினரால் முன்னெடுக்கப்படும் நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த சிறுவர் பூங்கா புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.