உமா ஓயா திட்ட பணிகளுக்கு வருகைதந்த ஈரானியர்கள் தனிமைபடுத்தல் செயற்பாடுகளுக்கு – கொவிட் மையம் தெரிவிப்பு

ஜூன் 16, 2020

உமா ஓயா பல நோக்கு அபிவிருத்தி திட்ட  வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்காக வருகைதந்த ஈரானியர்கள் அனைவரும் தமது வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனிமைபடுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கொவிட்  -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

இதனடிப்படையில் இலங்கை இராணுவத்தினரால் நடாத்தி செல்லப்படும் கரண்டகொள்ள விஷேட வதிவிட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இவ்வாறு வருகைதந்த ஈரானியர்கள் 85 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.