கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 740 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்

ஜூன் 16, 2020

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்ட  இலங்கை கடற்படை வீரர்கள் க சுமார் 740 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து  தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதுவரைக்கும் சுமார்  882 கடற்படை வீர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக தெரிவித்த கொவிட்  -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம், கடற்படை வீர்கள் 32 பேர் நேற்று (ஜூன், 15) குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  வைரஸ் தொற்றுக்குள்ளான  142 கடற்படை வீர்கள் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கொவிட்  மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.