இலங்கை அமைதிகாக்கும் படை வீரர்களின் இறுதிக் கிரிகைகள் இராணுவ மரியாதையுடன்

பெப்ரவரி 08, 2019

அமைதி காப்பு பணிகளின்போது உயிரிழந்த இரு இலங்கை அமைதிகாக்கும் படை வீரர்களின் இறுதிக் கிரிகைகள் நேற்று (07) இராணுவ மரியாதையுடன் இடம்பெற்றது.

பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 11ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படை அதிகாரி மேஜர் எச் டபிள்யூ டீ ஜயவிக்கிரம மற்றும் தலாகொலவௌ பிரதேசத்தை சேர்ந்த இயந்திரவியல் பொறிமுறை படையணியின் சார்ஜன்ட் எஸ் எஸ் விஜேகுமார ஆகிய இருவரின் பூத உடல்களும் முறையே பொலன்னறுவை அபயபுர பொது மயானத்திலும் மற்றும் பொல்பித்திகம ரவஎல பொது மயானத்திலும் நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலி நாட்டில் ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தவேளையில் உலக சமாதானத்திற்காக தமது உயிரை இழந்த இலங்கை இராணுவ வீரர்களுக்காக இடம்பெற்ற இறுதிக் கிரிகைகளின் போது மத அனுஷ்டானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. மேலும் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இப்படை வீரர்களின் இறுதிக் கிரிகைகளில் கலந்துகொள்ளும் வகையில் பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த காலம் சென்ற சார்ஜன்ட் எஸ் எஸ் விஜேகுமார வின் வீட்டுக்கு சென்று அவரின் இறுதிக்கிரிகையிலும் பின்னர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த காலம் சென்ற மேஜர் எச் டபிள்யூ டீ ஜயவிக்கிரம அவர்களின் இறுதிக்கிரிகையிலும் கலந்துகொண்டார்.

இவ்விரு இறுதிக் கிரிகைகளிலும் இராணுவத்தின் 1ஆம் பகுதிக் கட்டளையானது காலம் சென்ற மேஜர் ஜயவிக்கிரம அவர்களின் சேவை மேம்பாடுகள் குறிக்கப்பட்ட கோவை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களால் வாசிக்கப்பட்டடன், காலம் சென்ற இயந்திரவியல் பொறிமுறை படையணியின் சார்ஜன்ட் எஸ் எஸ் விஜேகுமாரவின் இறுதிக் கிரிகையில் லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யூ டீ எஸ் கமகே அவர்கள் மற்றும் மேஜர் ஜயவிக்கிரம போன்றோர் அன்னாரின் சேவை மேம்பாடுகள் குறிக்கப்பட்ட கோவையை வாசித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாலி நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி இப்ராஹீம் பூபக்கர் கெய்டா, சபாநாயகர், ஐக்கிய நாடுகளின் செயலாளர், இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளர், மினுஸ்மா படைகளின் கட்டளை தளபதி, ஐக்கிய நாடுகளின் செயலாளர் சபை அதிகாரிகள் மற்றும் பல உள்ளூர் மற்றும் சர்வதேச முகவர்கள் ஆகியோர் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவவிக்ரம மற்றும் கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார ஆகிய இவ்விரு இலங்கை அமைதிகாக்கும் படை வீரர்களும் கடந்த மாதம் (ஜனவரி, 25) மாலி நாட்டில் கீறன பகுதியில் ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் நடாத்தப்பட்ட பாரிய குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததுடன் அவர்களின் உடல்கள் இம்மாதம் (பெப்ரவரி,04) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. மேலும், இத்தாக்குதலில் காயமடைந்த மூன்று அமைதிகாக்கும் படை வீரர்களும் மாலி நாட்டில் காஒ விலுள்ள லெவல் 2 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலம்சென்ற இரு படை வீரர்களும் முறையே மேஜர் மற்றும் சார்ஜன்ட் ஆகிய தரங்களுக்கு பதவி உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஐ.ந பிரதிநிதிகள் மற்றும் பெரும் எண்ணிகையிலான மக்களும் இவ் இறுதிக்கிரிகைகளில் கலந்துகொண்டனர்.