34 இலங்கை மாணவர்கள் நேபாளத்திலிருந்து நாடு திரும்பினர்

ஜூன் 16, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேபாளத்திலில் சிக்கித்தவித்த இலங்கை மாணவர்கள் 34 பேர் இன்று அதிகாலை (ஜூன் 16) ஹிமாலய எயாலைன்ஸ் விஷேட விமானம் மூலம் நாட்டை  வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகைதந்தோரில் அநேகமானோர் நேபாள பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் என பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

விஷேட விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட அனைவருக்கும்  பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பீ சீ ஆர்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு முப்படையினால் நாடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.