ஆறு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது

ஜூன் 16, 2020

கட்டுநாயக்க குரன பகுதியில் ஆறு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை போலீஸ் போதை ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.