ஒமந்தாயில் ஆறு கிலோ கேரளகஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ஜூன் 17, 2020

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துவரங்குளம் பகுதியில் ஓமந்தை பொலிஸாருடன் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 6 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செட்டிக்குளம் விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த தேடுதல் நடவடிக்கையின்போது 6 கிலோ 16 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஓமந்தை பணிக்கர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இருபத்தொன்பது வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.