நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு கொவிட் மத்திய நிலைய தலைமையினால் விளக்கமளிப்பு
ஜூன் 17, 2020கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில், முப்படை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோரினால் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (ஜூன் 15) இடம்பெற்றுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் போது தாம் எதிர்கொண்ட கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தனிமைப்படுத்தல் நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகள், முப்படை மருத்துவர்களின் பங்கு, வைரஸ் தொற்றுக்குள்ளான வெளிநாட்டவர் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் எதிர்கால சவால்கள் உள்ளிட்ட தேசிய பணிகள் தொடர்பான பல்வேறு விடயங்களை
இலங்கையிலுள்ள எட்டு வெளிநாட்டு பணியகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் குழுவினருக்கு அதன் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுபடுத்தினார்.
இதன்போது, இக்கொடிய நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் வழங்கிய அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் தமது நன்றியை தெரிவத்தார்.
இக்கலந்துரையாடலில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் சிஎம்டிஈ செயத் எம் ஹாகிம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் அசோக் ராவ், இந்திய உயர் ஸ்தானிகராலய உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஆர்.எஸ். மிஸ்ரா, ஜப்பான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் காகு புகாஉரா, மாலத்தீவு உயர் ஸ்தானிகராலய ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் இஸ்மாயில் நசீர், பாகிஸ்தான் பாதுகாப்பு உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி, ரஷ்ய தூதரக இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய கூட்டுப்படைகளுக்கான பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டெனிஸ் ஐ ஷ்கோடா, பாதுகாப்பு மற்றும் அமெரிக்க தூதரக இராணுவ இணைப்பு பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் டிராவிஸ் ரே கொக்ஸ், சீன மக்கள் குடியரசின் தூதரக இராணுவ இணைப்பு பாதுகாப்பு ஆலோசகர் (பி.ஆர்.சி) சிரேஷ்ட கேணல் வான் டோங் மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதரக இராணுவ இணைப்பு பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட். கேணல் சாங் கியான்ஜின் ஆகியி வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.