'இட்டுகம' நிதியத்தின் இருப்பு ரூ.1,386 மில்லியனை எட்டியது

ஜூன் 18, 2020

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்கும் 'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1,386 மில்லியனை எட்டியுள்ளது. இந்த நிதியத்திற்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களினால் அளிக்கப்படும் நிதி நன்கொடைகள் மூலம் குறித்த மைல் கல் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய 'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1,386,634,166.06 ஆக அதிகரித்துள்ளது.

'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு அரசு வரிகள் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியத்திற்கான பங்களிப்பினை காசோலைகள், இலத்திரனியல் பண பரிமாற்றங்கள், www.itukama.lk எனும் இணையத்தளம் அல்லது #207# எனும் இலக்கத்தை டயல் செய்வதன் மூலம் வைப்புச் செய்ய முடியும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 0760700700, 0112320880, 0112354340 அல்லது  0112424012 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.