கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,421ஆக அதிகரிப்பு

ஜூன் 19, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 1,421 பேர் சிகிச்கையின் பின் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் எண்ணிக்கை 1947 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர்களில் 19 பேர் டுபாயிலிருந்தும், 2 பேர் கட்டாரிலிருந்தும், ஒருவர் லண்டனிலிருந்தும் ஒருவர் ரஷ்யாவிலிருந்தும் வருகை தந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 515 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.