வடக்கு கடல் பிராந்தியங்களில் 58 கிலோ கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றினர்

ஜூன் 20, 2020

யாழ் காரைதீவு கடற்பரப்பில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிநாட்டு கப்பல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த கைது இடம்பெற்றது.

மன்னார், சிரிதோப்பூர் பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 40 வயல்களை உடைய இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது போதைப் பொருள் கடத்துவதாக பயன்படுத்தப்ப்பட்ட மீன்பிடி படகு ஒன்றும் 58 கிலோ கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழிலுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.