சென்னை மற்றும் மும்பை நகரிலிருந்து 194 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூன் 20, 2020

இந்தியாவின் சென்னை மற்றும் மும்பை நகரில் இருந்து 150 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்கள் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் ஜனித் விதானபதிரன தெரிவித்தார்.

மேலும், லண்டன் நகரில் இருந்து மேலும் 59 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 504 விமானத்தின் மூலம் நாடு திரும்பினர்.

நாடு திரும்பிய இவர்கள், தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் ஜனித் விதானபதிரன பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு தெரிவித்தார்.