தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 335 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

ஜூன் 20, 2020

பேரமடு நிலையம், ஈடன் கார்டன் ஹோட்டல் மற்றும் மௌண்ட் லவினிய ஹோட்டல் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தமது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 335 பேர் இன்றைய தினம் (ஜூன்,20) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட முன்னர் இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்ததற்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இதுவரை 15,411 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 42 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 3634 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்று பேர் பதிவாகியதாகவும் அவர்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் எனவும்கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.