எட்டு அடி உயரமான புத்தர் சிலை முல்கிரிகல ரஜமகா விகாரைக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது
ஜூன் 20, 2020இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ - 17 ஹெலிகொப்டர் மூலம் 3.5 டொன் எடைகொண்ட எட்டு அடிகள் உயரமான புத்தர் சிலையானது, வீரகெட்டிய மந்தாதுவ விளையாட்டு மைதானத்திலிருந்து முல்கிரிகல ரஜமகா விகாரைக்கு நேற்றைய தினம் எடுத்துச்செல்லப்பட்டது.
சிலையை எடுத்துச் செல்வதற்காகவென விசேடமாக வடிவமைக்கப்பட்ட உபகரண தொகுதி மூலம் குறித்த சிலை எடுத்துச்செல்லப்பட்டது. 270 அடி உயரத்திற்கு விமானம் மூலம் தூக்கப்பட்ட சிலையானது சுமார் சுமார் மூன்று கடல் மைல் தூரம் வரை கொண்டு செல்லப்பட்டது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையின் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.