நீர்கொழும்பு சிறையிலிருந்தவாறு போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் முன்னெடுப்பு ; மூவர் கைது
ஜூன் 21, 2020நீர்கொழும்பு சிறையிலிருந்தவாறு முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட சந்தேக நபர்களில் கட்டுநாயக்கவைச் சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை மேற்கு மாகாண புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ஒரு தகவலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதி மற்றும் காட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சேவையாற்றும் இலங்கை விமானப்படை சார்ஜென்ட் ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் பரிமாற்றம் தொடர்பாக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ஒரு தகவளுக்க அமைய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.
சீதுவவில் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் மற்றும் 400 கிராம் கேரளா கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டன.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரைணையின் போது சிறையில் இருக்கும் போதைப்பொருள் குற்றவாளியின் மனைவி மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் இரண்டு கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்டனர்.
சிறை கைதியினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமையவே போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் இவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சீதுவ மற்றும் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.