புதிதக வைரஸ் தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை - கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம்

ஜூன் 21, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில்  புதிதக வைரஸ் தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை  என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முப் படையினரால் நிர்வகிக்கப்படுக்கப்படும்  தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து  15,553 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப்பூர்த்தி செய்து வெளியேறியுள்ளனர்.

மேலும், முப் படையினரால் நிர்வகிக்கப்படுக்கப்படும்  தனிமைப்படுத்தல் மையங்களில் 3,756 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 14பேர்  மற்றும் 12 கடற்படை வீரர்கள் உள்ளிட்ட  26 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.