கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,498 பேர் குனமடைதுள்ள அதேவேளை, 441 தொடர்ந்தும் சிகிச்சையில்

ஜூன் 22, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,950ஆக உள்ள நிலையில், இன்று (ஜூன், 22) காலை 6 மணியுடனான கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிதாக எவ்வித கொரோனா நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை.    

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,498 பேர் சிகிச்சையின் பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளநிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 441 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

இலங்கையர் ஒருவர் முதன் முதலாக வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட மார்ச் 11ஆம் திகதி தொடக்கம் இதுவரைக்கும் நாட்டில் 11 கொரோனா இறப்புக்கள் மாத்திரமே  நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.