கருணாவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை.

ஜூன் 22, 2020

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னால் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி யுத்த காலத்தில் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக.

 செயற்பட்டபோது படை வீரரர்களை கொளைசெய்தமை தொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் பூரண விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

ஆனையிறவு படை முகாமில் ஒரே இரவில் சுமார் 2000 க்கும் 3000 க்கும் அதிகமான    இராணுவ வீரர்களை கொலை செய்ததாக அவர் தேர்வித்திருந்த கருத்து தொடர்பில் உடனடியாக பூரண விசாரணைகளை ஆரம்பிகுமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குறிப்பிட்ட எண்ணிக்கையினரை தான் புலிகள் அமைப்பில் இருந்த வேளையில் கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.

“நான் புலிகள் அமைப்பில் இருந்த வேளையில், ஆனையிறவு படை முகாமில் ஒரே இரவில் சுமார் 2000 க்கும் 3000 க்கும் அதிகமான  இராணுவ வீரர்களை கொலை செய்ததுடன், கிளிநொச்சியிலும் நான் அதைவிட அதிகமான இராணுவ வீரர்களை கொலை செய்துள்ளேன்.  இது இலங்கையில் கொரோனா வரைஸ் தொற்றாலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமானது” எனவும் அவர் தெரிவித்தார்.