கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 785 ஆக உயர்வு

ஜூன் 22, 2020

கொரோனா வைரஸ்  தொற்றுகுள்ளான மேலும் 12  கடற்படை வீரர்கள் குணமடைந்ததை அடுத்து  கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை   785 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த கடற்படை வீரர்கள் பீசிஆர் பரிசோதனைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து அனுப்பிவைக்கப்ட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர்கள்  சுகாதார அறிவுறுத்தல்களுக்குஅமைய  வீடுகளில் இரண்டு வார சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.