போதைப்பொருள் விநியோகத்தவர்களுக்கு உதவிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

ஜூன் 22, 2020

மாத்தறை மற்றும் மகர சிறைச்சாலைகளில்  உள்ள போதைப்பொருள் விநியோகஸ்தர்களுடன் தொடர்புகளைப் பேணிய இரு சிறைச்சாலை அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 சிறைச்சாலைகளிலிருந்த  கைதிகளுக்ககு கைபேசிகளை  வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த அதிகாரிகள் இருவரும்   பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்  துஷாரா உபுல்தெனிய தெரிவித்தார்.

மகர சிறைச்சாலையில்  சிறைச்சாலை அதிகாரி ஒருவர்  மூன்று கைபேசிகளை  கைதி ஒருவருக்கு  ஒப்படைக்க முற்பட்ட சம்பவத்தின்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாத்தறை சிறைச்சாலையில் இதுபோன்ற சம்பவத்தில் மற்றுமொரு  சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேலும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் தண்டனை பெறும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு உதவுபுரிவதிலிருந்தும்  ஊழலில் ஈடுபடுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.