யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 4.5கிலோ கிராம் எடையுள்ள வெடிமருந்துகளுடன் இருவர் கைது

ஜூன் 23, 2020

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 4.5கிலோ கிராம் எடையுள்ள டீ என் டீ ரக வெடிமருந்துகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு சந்தேகநபர்கள் பளை பொலிஸாரால்  நேற்று (ஜூன், 22)  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, அரியாலை மற்றும் மீசாலை பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் கடத்திச்செல்ல முயன்ற ஒரு தொகை உயர் ரக வெடிமருந்துகளை பளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.

இப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும்  நடவடிக்கைகளின் போது குறித்த சந்தேக நபர்கள் வெடிபொருட்களை சேகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த வெடிபொருட்களை சேகரிப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.