போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூவர் கடற்படையினரால் கைது
ஜூன் 23, 2020இலங்கை கடற்படை, கிண்ணியா மற்றும் தம்பலகமம் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூவர் நேற்றைய தினம் (ஜூன், 22) கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாண கடற்படை கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது கிண்ணியா நகரத்தைச் சேர்ந்த ஒருவர் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். மேலும், தம்பலகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் 400 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த தன் பேரில் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் கஞ்சாவினை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய இலகு ரக லொரியும் கைப்பற்றப்பட்டது.
குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கிண்ணியா, கந்தளாய் மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்த 31, 39 மற்றும் 40 வயதுகளையுடையவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா மற்றும் தம்பலகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.