ரணவிரு சேவா அதிகாரசபைக்கு சீன தூதரகத்தினால் 2.7 மில்லியன் ரூபா நிதியுதவி

ஜூன் 23, 2020

படை வீரர்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக சீன தூதரகத்தினால்  ரணவிரு சேவா அதிகாரசபைக்கு 2.7 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீரவின் வேண்டுகோளுக்கமைய இந்த நிதியுதவி அளிக்கப்பட்டது.

ரணவிரு சேவா அதிகாரசபை வளாகத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஸ்ட கேர்ணல். வான் டொங்கினால் ரணவிரு சேவா அதிகாரசபை தலைவர் மேஜர் ஜெனரல் சேனாதீரவிடம்   2.7 மில்லியன் ரூபா நன்கொடை நிதி கையளிக்கப்பட்டது. இந்த நிதியுதவிஅங்கவீனமுற்ற  படைவீரர்களுக்கான செயற்கை கால்களை கொள்வனவு செய்வதற்காகவும்  படைவீரர்களின் குழந்தைகளுக்கு தகவல் தொழிநுட்ப கல்வியை வழங்குவதற்கும் செலவிடப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சாங் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 ரணவிரு சேவா அதிகார சபையானது போரின் போது உயிரிழந்த, காணாமல் போன மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் சேமலாப நலனைக் கவனிக்கும் அரச நிறுவனங்களில் ஒன்றாகும்.