இயந்திர வாள்கள் பதிவு செய்தல் தொடர்பான ஊடக அறிக்கை

பெப்ரவரி 15, 2019

விஷேட அறிவித்தல்

சகல இயந்திர வாள்கள் பெப்ரவரி 28 திகதிக்கு முன்னர் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவிற்கமைய பாதுகாப்பு அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

காடுகள் அழிக்கப்படுவதனை கட்டுப்படுத்தல், இயந்திர வாள்களைப்பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபாரத்தை நிறுத்துதல் மற்றும் மரங்கள் வெட்டப்படுவதனை மட்டுப்படுத்துதல் போன்றவைகளே இதன் நோக்கங்களாகும்.

இதற்கமைய அரச, அரச சார்பு , தனியார்துறை நிறுவனங்களினால் அல்லது தனி நபர் ஒருவரினால் பயன்படுத்தும் சகல இயந்திர வாள்களும் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை பதிவு செய்து அவற்றுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான பதிவு நடவடிக்கைகள் 2019 பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 28ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டதை அடையாளம் காண்பதற்காக விஷேட அனுமதி பத்திரம் மற்றும் இலக்கத்தகடுகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அனைவரினதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

செயலாளர்

பாதுகாப்பு அமைச்ச