இடுகம கொவிட் – 19 நிதியத்தின் மீதி ரூபா 1, 392 மில்லியனையும் தாண்டுகிறது
ஜூன் 24, 2020'இடுகம' கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு நேற்றுடன் (ஜூன், 23) மீதி 1,392 மில்லியனாக அதிகரித்துள்ளது.
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் 'இடுகம' சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்புத்தொகை சுமார் 1,392,909,182.76, ரூபாவையும் தாண்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் தகவலகள் தெரிவிக்கின்றன.
'இடுகம' கொவிட் -19 நிதியானது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்தல் மற்றும் அதனை விரிவுபடுத்தல் உட்பட கொரோனாவிற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் பிதான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும்.
பீ சீ ஆர் பரிசோதனைகளுக்காக சுமார் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள அதேவேள அவற்றிலிருந்து ஆறு மில்லியன் ரூபா 6 ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந் நிதியத்திற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர்.
நன்கொடைகளை, காசோலைகள், தொலை பணபரிமாற்றம் மூலமாகவோ அல்லது www.itukama.lk இணையத்தளத்தினை அணுகி அல்லது # 207 # ஐ டயல் செய்வதன் மூலம் வைப்புச் செய்ய முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 0760 700 700, 0112 320 880, 0112 354 340 அல்லது 0112 424 012 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.