குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முக்கியஸ்தர் விஷேட அதிரடிப்படையினரால் கைது

ஜூன் 24, 2020

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றின்  முக்கியஸ்தர்  ஒருவர் விஷேட அதிரடிப்படையினரால்  செவ்வாய்க்கிழமையன்று (ஜூன், 23) கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர்  கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்,  உடையார்கட்டு மூங்கிலாறு பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் எனவும் அவரிடமிருந்து  17மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் கூர்மையான கத்தி ஆகியன கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.