வாழைச்சேனை காகித ஆளையை மீளமைக்க கடற்படை ஒத்துழைப்பு
ஜூன் 24, 2020அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமைய இலங்கை கடற்படை மட்டக்களப்பில் அமைந்துள்ள வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை தொர்டந்தும் வழங்குவதுடன் அதன் பெருமையை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க உள்ளதாகவு கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் நாட்டின் தேசிய வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் கடற்படையினர் வழங்குவதாக இன்று அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கடற்படையின் மின் மற்றும் மின்னியல் பொறியியல் துறை’ பிரிவினர் குறித்த தொழிற்சாலையில் உள்ள பல்வேறு பிரதான இயந்திரங்களை இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டீ சில்வாவின் ஆலோசனைகளுக்கு அமைய மீளமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.