இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

பெப்ரவரி 15, 2019

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (பெப்ரவரி, 15)வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கொழும்பு லைட் ஹௌஸ் கெலியில் இடம்பெற்ற நிறைவு தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

நேற்றையதினம் ஆரம்பமான இவ்வுயர் மட்ட பேச்சுவார்த்தையில் பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகிர சுகியாமா, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, ஜப்பானிய பிரதம மந்திரியின் விஷேட ஆலோசகர் திரு. கெண்டாரோ சொனுரா, ஜப்பானிய பாதுகாப்பு அதிகாரிகள், இலங்கை மற்றும் ஜப்பானிய சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.