ரணவிரு சேவா அதிகாரசபை படை வீரரின் மகனுக்கு கிரிக்கட் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
ஜூன் 25, 2020நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்த படை வீரரின் மகனுடைய விளையாட்டு திறமைகளை மேலும் ஆர்வமூட்டும் வகையில் ஒரு தொகை கிரிக்கட் விளையாட்டு உபகரணங்களை ரணவிரு சேவா அதிகாரசபை அன்பளிப்பு செய்துள்ளது.
அன்பளிப்பானது 2009 பெப்ரவரி 05 ஆம் திகதி செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மனிதாபிமான செயற்பாடுகளின்போது நாட்டுக்காக தனதுயிரை தியாகம்செய்த முதலாவது இராணுவ புலனாய்வு படைப்பிரிவை சேர்ந்த வரண்ட் ஒபீசர் II எச் கே எஸ் ரத்னபால என்பரின் மகனான சந்தீப கல்ஹாரவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 60,000 ரூபா பெறுமதியான குறித்த அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேஸ்டன் கல்லூரியில் தரம் 12 கல்வி பயிலும் இவர் கல்லூரியின் கிரிக்கட் கழக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த அன்பளிப்பிற்கு ரணவிரு சேவா அதிகாரசபை தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) நந்தன சேனாதீர மற்றும் நன்கொடையாளர்கள் ஒத்துழைப்புக்களை நல்கியுள்ளதுடன், ரணவிரு சேவா அதிகாரசபையில் வைத்து அதன் தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வு)சேனாதீரவினால் குறித்த உபகரணங்கள் கல்ஹாரவிடம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது நிறுவன பணிப்பாளர் மற்றும் பிரதிப்பணிப்பாளர் களுத்துறை மாவட்ட அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.