சீ எஸ் டீ கைவிடப்பட்ட 500 வீடுகளை தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றியமைப்பு
ஜூன் 25, 2020சிவில் பாதுகாப்பு திணைக்களம் அம்பாறை தீகவாபிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட 500 வீடுகளை புதிய தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றும் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக அதன் ஊடக பணிப்பாளர் கேணல். நிலந்த ரத்னசிங்ஹ இன்று (ஜூன் 25) தெரிவித்தார்.
குறித்த வீடுகள் கைவிடப்பட்ட கிராமத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்துள்ளதுடன், சுமார் 100 க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் அதன் புனர்நிர்மான பணிகளை மேற்கொள்ளும் வகையில் திணைக்கள பணிப்பாளர் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸின் உத்தரவின் கீழ் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக ஊடக பணிப்பாளர் ரத்னசிங்ஹ பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இவ்வீடுகளை சிவில் பாதுகாப்பு திணைக்களம் புனர்நிர்மானம் செய்வதானது கொரோனாவில் இருந்து நாட்டை பாதுகாக்கும் முக்கிய தேவை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கும் என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.