மக்கள் நலன் கருதி கடற்படையினரால் நடமாடும் பற்சிகிச்சை பிரிவி ஆரம்பிப்பு
ஜூன் 25, 2020கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டீ சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படை உயர்தரம் வாய்ந்த நடமாடும் பற்சிகிச்சை பிரிவி ஒன்றை வைபவரீதியாக இன்று (ஜூன், 25) ஆரம்பித்துள்ளது.
குறித்த நடமாடும் பற்சிகிச்சை பிரிவானது உயர்தரம் கொண்ட பற்சிகிச்சைக்கான உபகரணங்களை கொண்டு ஆடம்பர வாகனம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இப் பிரிவின் ஊடாக கடற்படை வீரர்களுக்கு மாத்திரமன்றி நாட்டின் பல பகுதிகளிலும் வசிக்கும் வரியா குடும்பங்களை சேர்ந்த சிவிலியன்களுக்கும் ஏற்படும் வாய்வழி சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் பற்சிகிச்சை பிரிவு, ஒட்டோமொபைல் மற்றும் மின் பொறியியல் துறைகளின் அயாராத உழைப்பின் வெளிப்பாடாகவே குறித்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பிரிவு ஏந்தவொரு அவசர பற்சிகிச்சை நிலைமைகளின்போதும் சிகிச்சை வழங்க தயாராக உள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.