அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

பெப்ரவரி 15, 2019

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (பெப்ரவரி , 15) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடையே இரு தரப்பு முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.