ஓமானில் இருந்து 288 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூன் 29, 2020

288 இலங்கையர்கள் அடங்கிய மற்றொரு குழுவினர் ஓமான் நாட்டில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்றைய தினம் (ஜூன்,29) வந்தடைந்தனர்.

இவர்கள்,கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் ஓமான் நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வருகை தந்த இவர்களுக்கு,  சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை , நேற்றைய தினம் ஹொங்கொங்கிலிருந்து 26 இலங்கையர்கள் தாயகம் திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.