பொது இடங்களில் முகக்கவசம் அணியத்தவறிய 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு

ஜூன் 29, 2020

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய சுமார் 1,214 நபர்கள் இருவாரங்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் அறிவுருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக  பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விஷேட நடவ்டிககையினை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார வழிமுறைகளை பின்பற்றத்தவறிய  சுமார் 7,000 நபர்கள்  எச்செரிக்கப்பட்டனர்.