ஊழல் நிறைந்த சிறைச்சாலை முறைமையை சீர்செய்தலுக்கே முன்னுரிமையளிக்கப்படும் - சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய

ஜூன் 29, 2020

 

ஊழலற்ற ஒரு நிறுவனமாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இறுதி ஒப்புதல் கிடைத்துள்ளதால் 200 ஆண்டுகளாக வேரூன்றிக் காணப்படும் ஊழல் நிறைந்த சிறைச்சாலை முறைமையை முற்றிலும் கட்டுப்படுத்த தானும் தனது அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய தெரிவித்தார்.

"நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த காரணமான இந்த சிறைச்சாலை முறைமையில் நிலவும் ஊழலை  தடுத்து நிறுத்தாத வரை எம்மால் எந்த ஒரு செயற்பாட்டினையும்  திறம்பட முன்னெடுக்க முடியாத நிலை காணப்படும்" என அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகமாக இருப்பது முதல் போதைக்கு அடிமையானவர்களுக்கு புணர்வாழ்வு அளித்தல், பாதாள உலக முக்கியஸ்தர்களை அவதானத்துடன் கையாள எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறைச்சாலை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கல், தற்போதுள்ள சிறைச்சாலைகளை மனிதாபிமானமிக்க சர்வதேச தரத்திற்கு இணையான சிறைச்சாலைகளாக மாற்றல் என்பன தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

அவர் அளித்த நேர்காணலின் முழுவடிவம் :

கே: நாட்டில் காணப்படும் சிறைச்சாலைகளை நிர்வகிப்பதில் உள்ள முக்கிய சவால்கள் எவை?

ப: சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகமாக இருப்பது இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாகும். கொழும்பு சிறைச்சாலை மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளில் 300 சதவீதத்திற்கும் அதிகமான கூட்டமும் நாடளாவிய ரீதியில் காணப்படும் ஏனைய சிறைச்சாலைகளில் 173 சதவீதத்திற்கும் அதிகமான கூட்டமும் உள்ளன. இது நீண்டகாலமாக நிலவும் இடம் சார்ந்த பிரச்சினையாகும். கைதிகள் நெரிசலாக சிறைக்கூடுகளில் வைக்கப்பட்டிருத்தலே இன்று எம்மால் தீர்க்கப்படவேண்டிய முதலாவது பாரிய சவாலாகும்.

இவ்வாறு சிறைச்சாலைகளில் அதிகமான கூட்டம் ஏற்பட காரணம் குறுகிய கால சிறைவாசம் விதிக்கப்படுபவர்கள் ஆகும். அபராதம் செலுத்த முடியாமை மற்றும் ஜாமீன் பெற முடியாமை காரணமாக அவர்களில் பெரும்பாலோருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

கொழும்பு சிறைச்சாலையில், நெரிசல் அதிகமாக காணப்படுவதால் கைதிகள் உறங்குவதற்கு கூட இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் அடிப்படை சுகாதார வசதிகள் சிறப்பாக இன்மை காரணமாக அவர்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

நாம் எதிர்கொள்ளும் இரண்டாவது பெரிய சவால், சிறைச்சாலை காவலர்களின் பற்றாக்குறை. தற்போது  நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 1500 சிறைச்சாலை காவலர்களுக்கான வெற்றிடம் காணப்படுகின்றது.

கே: தற்போதைய சூழ்நிலையில், சிறைச்சாலைகளை ஊழலற்ற நிறுவனமாக மாற்றுவது என்பது பாரிய சவாலான ஒரு விடயம். இதை நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?

ப: சிறைச்சாலை அமைப்பில் காணப்பட் ஊழல் செயற்பாடுகளை முறியடிக்க சிறைச்சாலை திணைக்களம் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டும். சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல், ஊழல் மற்றும் பிற முறைகேடுகள் சார்ந்த சட்டங்கள் தொடர்பாக அவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான சாதகமான நிலைமைகள் என்பன தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்.

ஊழல் தொடர்பான தண்டனை, சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்கும்போது, ​​அவர்களில் பெரும்பாலோர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்து, சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை சூழலில் ஏற்படும் சாதகமான நிலைமையை குறைத்தல் வேண்டும்.

நான் பதவியேற்பதற்கு முன்பு, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கடத்தல்காரர்கள், பாதாள உலக குற்றவாளிகள் ஆகியோர் சிறைகளில் சட்டவிரோத பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க நிலைமை காணப்பட்டது. ஊழலுக்கு எதிராக செயற்பட நாம் எமது அதிகாரிகளின் திறன்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கே: சிறைச்சாலைகளில் பணிபுரிவோரின் அறிவினை மேம்படுத்த வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் உங்களிடம் உள்ளனவா?

: ஆம் நன்னடத்தை சேவைகளை உருவாக்கிய சிலநாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்,  அண்மையில் மாலைதீவு சிறைச்சாலை திணைக்களம் நன்னடத்தை சேவைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளே  எதிர்காலத்தில் எமது தேவையும் கூட. ஆகையினால் எமது சிறைச்சாலை அதிகாரிகளையும் நன்னடத்தை அதிகாரிகளாக மாற்ற வேண்டியுள்ளது.

கே: நன்னடத்தை அதிகாரிக்கும் சிறைச்சாலை அதிகாரிக்கும் இடையிலான வேறுபாடு என்ன?

:  சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தொழில் வல்லமை மூலம் கைதிகளை உடலியல் ரீதியாக எவ்வாறு கையாளவேண்டும் என கற்பிக்கப்பட்டுள்ளனர். ஒரு நன்னடத்தை அதிகாரி கைதியின் பாதுகாப்பையும் அவரின் உணர்ச்சிகளையும் கையாளம் வகையில் செயற்படுவர். இவ்வாறான அதிகாரி ஒருவருக்கு கைதியின் உணர்வுகளையும் அவரது நடத்தைகளையும் அறிந்துகொள்ளும் திறமை இருக்கவேண்டும். இவ்வாறன ஒருவர்தான் மனிதாபிமானத்தை மதிக்கக்கூடியவராக இருப்பார்.  

கே: சிறைச்சாலை அதிகாரிகளின் தரத்தினை மேம்படுத்த எவ்வாறான நலன்புரித்திட்டங்க்களை நீங்கள் முன்னெடுக்க உள்ளீர்கள்?

:  நாம் குறுகிய நிதி (பட்ஜெட்) ஒதுக்கீட்டில் அதிகாரிகளுக்கு பல நலந்புரித்திட்டங்களை தொடங்கினோம். இருந்தபோதும் இன்னும், அவர்களுக்கு ஒரு சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டிய பிரிவுகளும் உள்ளன. அவர்களது தங்குமிட வசதிகள் தொடர்பாக கவனம்செளுத்தும்போது அது எமக்கு திருப்தியளிக்கவில்லை. இது தொடர்பில் நான் கவலையடைகிறேன். சில அதிகாரி குடியிருப்புகளில் கைதிகளின் தங்குமிடத்தை விட மோசமான நிலையில் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

கே: புள்ளிவிபரங்களின் பிரகாரம்  மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் அதிகரித்து காணப்படுகிறது. இது சிறை மறுசீரமைப்பு முறையில் சில குறைபாடுகள் இருப்பதை காட்டுகிறதா?

: இப்புள்ளிவிபரங்களை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின்  மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பாரியாவில் வித்தியாசம் இல்லை.  போதைப்பொருளுக்கு அடிமையானோரில் 80 வீதத்தில் 39 வீதம் காணப்படுகிறது.

போதைப்பொருளுக்கு அடிமையான குற்றவாளிகளை ஏனைய குற்றங்களுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து பிரித்து வைக்க நாம் முன்மொழிந்துள்ளோம். அதேவேளை எமது அதிகாரிகள் குற்றவாளிகளை சிறப்பாக கையாளும் வகையில் பயிற்றப்பட்டுள்ளனர். அனால் போதைப்பொருளுக்கு அடிமையானோரை அல்ல. அது முற்றிலும் வித்தியாசமானது அதற்கு விஷேட ஆலோசனை வழங்கும் தேவை காணப்படுகிறது.      

இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மூன்று மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் அதே சமூகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். பின்னர் மீண்டும் இரண்டு வாரங்களுக்குள் அதே குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் தான் இலங்கையில் இப்புள்ளிவிபரம் அதிகரித்து காணப்படுகிறது.    

இன்று அம்பேபுஸ்ஸ மற்றும் கண்டக்காடு ஆகிய இரண்டு புனர்வாழ்வு மையங்கள் சிறைச்சாலை திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்றன. போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு அளிப்பதற்காகவும்   சிறைகளில் நெரிசலை குறைப்பதற்காகவும் வீரவில பிரதேசத்தில் மற்றொரு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

கே: கைதிகளுக்கு வழங்கப்படும் பெரும்பாலான தொழில் பயிற்சி பாடநெறிகள் தொழில் சார்ந்தவை அல்ல. நீங்கள் தொழிற் சந்தையில் உள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொழில் பயிற்சி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தப் போகிறீர்களா?

:  ஆம், சிறைக் கைதிகளுக்கு புதிய பயிற்சி நெறிகளை அறிமுகப்படுத்தவதற்கு தனியார் துறையின் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

முதலீட்டு சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பயிற்சித்திட்டம் மகாரா சிறைச்சாலையில் தற்போது நடாத்தப்பட்டு வருகிறது. இதை ஒத்த பயிற்சித்திட்டம் வெலிக்கடை சிறைச்சாலையிலும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது அமைச்சரவையினால் அனுமதிவழங்கப்பட்ட தனியார் மற்றும் பொது திட்டமாகும்.    

எவன்காட் நிறுவனத்தினால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுக்கு மூன்று மாதகால தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு வெளியில் சென்று வேலைசெய்யும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன் வேளை நிறைவுற்றதுடன் சிறைச்சாலைக்கு திரும்பவேண்டும். இவர்கள் சம்பளம் பெற தகுதியானவர்கள் என்பதுடன் அவர்களின் சம்பளம் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படும் அவர்கள் விடுதலை பெற்று செல்லும்போதும்,   அவசர தேவைகளின்போதும் மீள பெற்றுக்கொள்ள முடியும்.

கே:  சிறைச்சாலை முறைமைகளை டிஜிட்டல் மயமக்கவுள்ளதாக சொன்னீர்கள். அதன் முன்னேற்ற நடவடிக்கைகள் என்ன?

: நாம் சிறைச்சாலை தகவல் முகாமைத்து முறையினை ஆரம்பித்துள்ளோம். இம்முறையில்
தண்டனை பெற்ற ஒருவரை சிறைக்கு அனுமதிப்பது முதல் அவரை வெளியேற்றுவது வரையான அனைத்து நிர்வாகப் செயற்பாடுகளும் உள்ளடக்கப்படும். குறித்த முறைமயினுள் சுமார்  15 சிறைச்சாலைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இவ்வருட இறுதிக்குள் அனைத்து சிறைச்சளைகளையும் இம்முறைக்கு உட்படுத்தி நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

கே:  பொதுமக்கள் நேரடியாக முறைப்பாடு செய்வதற்கான ஏதாவது வசதிகள் உள்ளனவா?

: ஆம்  சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகள் அல்லது எமது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்பன தொடர்பான புகார்களை 0112678600 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிப்பதன் மூலம் அவற்றுக்கு உடனடியாக  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வண்ணம் விஷேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவிற்கு முறைப்பாடுகளை வழங்குபவர்  கைதியொருவரோ, அவரின் சொந்தக்காரரோ, அதிகாரியொருவரோ அல்லது வெளி நபார் ஒருவரோ எவராக இருந்தாலும் அவர் தொடர்பான இரகசியங்களை 100 வீதம்  பாதுகாக்கும்.

கே:  நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஒரு ஆடம்பர அறை கண்டுபிடிக்கப்பட்டதுடன் இவ்வாறானதொரு அறை ஏனைய சிறைச்சாலைகளிலும் காணப்படுமா என அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

 ப : இல்லை, சட்டவிதிகளின் கீழ் இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. நீர்கொழும்பு சிறைச்சாலையினுடைய சில அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு அமைய இவ்வாறான வசதிகள் அவர்களுக்கு வழக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக நாம் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதுடன், கைதிகளுக்கு இவ்வாறான வசதிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.    

 எதிர்காலத்தில் கைதிகளுக்கு இதுபோன்ற விஷேட கவனிப்புக்கள் எந்தவொரு சிறைச்சாலைகளிலும் இடம்பெற சிறைச்சாலை திணைக்களம் இடமளிக்கமாட்டது என்பதுடன்  சிறை கைதிகள் அனைவருக்கும் சமமாக நடத்தப்படுவர்.

கே: பாதாள உலக குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேணுவோர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொது அறிக்கையில் சில வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்திருந்தார். அது தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன?     

: அது ஒரு நல்ல முன்னெடுப்பு நாமும் ஊழல் அற்ற சிறைச்சாலை முறையினையே எதிர்பார்க்கிறோம்.  முதலில் நட்டு சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும். அத்துடன் குற்றவாளிகள் ஒழுக்க விதிமுறைகளின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சிறைச்சாலை அதிகாரிகள் அவ்வாறான சட்டவிரோத செயல்களில் பிடிபட்டால், நாம் முதலில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்வோம். மேலும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர்.

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்தின் பேரிலும் மற்றும் சிறைச்சாலை திணைகளத்தின் நற்பெருக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் செயற்பட்ட சில அதிகாரிகள் தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.  

குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கும் குற்றவாளிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் சிறைச்சாலை முறைமைக்குள் எந்த ஒரு அதிகாரிகளுக்கும் இடமில்லை. அவ்வாறு செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுப்பேன். இதேவேளை அர்ப்பணிப்போடு நேர்மையுடன் செயற்படும் பல அதிகாரிகளும் உள்ளனர்.   

கே:  பாதுகாப்பான தேசமொன்றை கட்டி எழுப்புவதற்கான அரசின் முயற்சிகளுக்கு  ஒத்துளைப்பு வழங்கும் வகையில் சிறைச்சாலை முறைகளை மாற்றியமைப்பதற்காக ஜனாதிபதி உங்களை நியமித்துள்ளார். அதற்கான ஒத்துழைப்பை உங்களால் வழங்க முடியம் என நீங்கள் உறுதியாக உள்ளீர்களா?

: ஆம், எனது சேவைக்காலப்பிரிவில் பெற்றுக்கொண்ட நீண்ட கால அறிவு, பயிற்சி, அனுபவம் மற்றும் திறமைகளை பயன்படுத்தி சிறைச்சாலை முறையில் ஊழல் அற்ற  முறையாக மாற்ற என்னால் செய்ய முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.  அதில் நான் முழு உறுதியுடனும் இருக்கிறேன்.  சிறைச்சாலை ஊழல் முறைகளை கலைந்து திணைக்களத்தின் பெயரை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு சிறைச்சாலையின்  சிரேஷ்ட பணியாளர்களின் பூரண ஒத்துழைப்பையும் பெற உள்ளேன்.  

கே: முன்னையகாலங்களில் சில திறமையான சிறைச்சாலை அதிகாரிகள்   குற்றவாளிகளிடம்  இருந்துஅச்சுதுருத்தல்களை எதிர்நோக்கினர் அவ்வாறான அச்சுறுத்தல்களை நீங்கள் அல்லது உங்களது அதிகாரிகள் எதிர்கொண்டனரா?

: ஆம், அவ்வாறான அச்சுறுத்தல்களை சில அதிகாரிகள் எதிர்கொண்டார்கள் என நான் கேள்விப்பட்டேன். அனால் நாம் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு பயந்து   எமது பணியை முன்னெடுத்து  செல்வதை நிறுத்தமாட்டோம். மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே நாம்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.  எனவே, நாட்டினுடைய தேசிய  பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் ஊழல் முறைகளை ஒழிப்பதற்கு  முறையான பணிகளை முன்னெடுத்து செல்லும் என்னையும் எனது அதிகாரிகள் குழுவினரையும் எதுவும் தடுக்க முடியாது.

கே: உங்களது இந்த பதவிக் காலப்பிரிவில் எவ்வாறான சிறைச்சாலை முறைமைகளை எதிர்பார்க்கிறீர்கள்?

: உலகில் உள்ள அனைத்து சிறைச்சளைகளும் குறிப்பிட்ட சில சிறைச்சாலை முறைமைகளை  பராமரித்துவருகின்றன. அவைகளில் “நெல்சன் மண்டலோ விதிகள்” அதிகமான சிறைச்சாலைகளில் பின்பற்றப்பட்டு வருகின்றன. சிறைச்சாலைகளில் பெண் கைதிகளை நிர்வகிக்கும் வகையில் பாங்காக் விதிகளும் சிறிவர் கைதிகளை நிர்வகிக்க பீஜிங் விதிகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.  

எனவே சர்வதேச தரத்திற்கு இணையாக எமது நடவடிக்கைல்களை நாம் மாற்றிகொள்வது அவசியமாகும். இச்சர்வதேச தரத்தின்கீழ் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்வது மாத்திரமன்றி   நிபுணத்துவத்தை பராமரிப்பதன் ஊடாக கைதிகளை மனிதாபிமான முறையில் செயற்படுத்தும் வண்ணம் முழு சிறைச்சாலை முறைகளையும் மாற்றியமைக்கவேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளும் சீர்திருத்த நிலையங்களாக மாற்றப்பட்டு அங்கிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் சமூகத்தில் சிறந்த மனிதராகவே அன்றி குற்றவாளிகளாக அல்ல.