துப்பாக்கியுடன் இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது

ஜூன் 30, 2020

நுவரெலிய, கல்பலம பிரதேசத்தில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட 21 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேகநபர்கள் இன்று (ஜூன் 30) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கல்பலம சந்தியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் ஏழு துப்பாக்கி ரவைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.